பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். மேலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் கடந்த ஆண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் செய்தியாளர்களை சந்திக்க வருகை தந்திருந்த பூனம் பாண்டே, அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் பூனம் பாண்டே பின்னாளில் இருந்து வந்த ஒருவர் அவரிடம் செல்ஃபி எடுக்கிறார். அப்போது திடீரென அந்த நபர் பூனம் பாண்டேவை முத்த மிட முயன்று அத்துமீறுகிறார். உடனே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்கிறார் பூனம் பாண்டே.
இந்த வீடியோ தொடர்பாக அந்த நபருக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த வீடியோ ஒரு ஸ்கிரிப்டட் என்று கூறப்படுகிறது.