A fan built a temple to Rajinikanth in madurai

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். திருமணத்தகவல் மையம் நடத்தி வரும் இவர், ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் தன் வாடகை வீட்டின் ஒரு அறையில் ரஜினிக்கு கோவில் கட்டியுள்ளார்.

Advertisment

3 அடி உயரத்தில்,250 கிலோ எடை கொண்டு கருங்கல்லினால் அந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலைக்கு அவரே அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இவரது செயலுக்கு அவரது பெற்றோரும் மனைவியும் உறுதுணையாக இருக்கின்றனர்.

Advertisment

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், "ஆரம்பத்தில் ரஜினியின் படங்களை வைத்துத்தான் தினமும் கும்பிட்டு வந்தேன். பிறகு கோவிலில் சிவனுக்கு செய்கிறார்களேஅதே மாதிரி கருங்கல்லில் ரஜினிக்கு ஆர்டர் கொடுத்து சிலை செய்தேன். இந்தியாவில் இல்லை உலகத்திலே ஒரு நடிகருக்கு கருங்கல்லில் சிலை வைத்ததாக சரித்திரமே கிடையாது. கோவிலில் எப்படி வழிபாடு செய்வோமோ அதேபோன்று யாகம் வளர்த்து, பால் அபிஷேகம் செய்து ஆராதனை காட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம்" என்றார்.