Advertisment

விஜய் பட ரீமேக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ; வெளியான புது தகவல்

Famous Telugu actor in Vijay movie remake; New information released

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016-ல் வெளிவந்தசூப்பர் ஹிட்டான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. இந்தியில் பிரபல நடிகர் வருண் தவான் நடிப்பதாக கூறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் 'தெறி'.படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில் முன்னணி நடிகர் ரவி தேஜா நடிக்க சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி தேஜா நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு 'போலீசோடு' என்ற தலைப்பில் 'தெறி' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ACTOR PAWAN KALYAN actor vijay atlee
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe