Skip to main content

பிரபல பாடகர் கரோனாவால் மரணம்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

joe


உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,,65,659 பேர் குணமடைந்துள்ளனர்

இந்நிலையில் பிரபல பாடகர் ஜோ டிப்பி கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார். இவருக்கு  வயது 61. இவர் கிராமி உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்போது தனது ஃபேஸ்புக்கில், "நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். எனது குடும்பமும் நானும் தனிமையில் தான் உள்ளோம். எனது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் விழிப்புடன் இந்த நோயை எதிர்த்து போராட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்