Advertisment

2 லட்சத்தை தொட்ட மின் கட்டண பில்... அதிர்ச்சியடைந்த பிரபல பாடகி..

asha bosle

Advertisment

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள லோனேவாலாவில் வசித்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதத்திற்கான இவரது வீட்டு மின் கட்டணம் ரூ. 2,08,870 ரூபாய் பில் கட்டணத்தை மகாராஷ்ட்ரா மாநில மின்சார விநியோக நிறுவனம் அனுப்பி உள்ளது. இந்த கட்டண பில்லை பார்த்த பாடகி ஆஷா போஸ்லே அதிர்ச்சியடைந்து மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும்” என கேட்டுள்ளார்.

Advertisment

இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர், ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார். அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.

asha bosle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe