Advertisment

வலிப்பு காரணமாக விமான நிலையத்தில் பலியான பிரபல இளம் பாடகர்...

21 வயதே ஆன பிரபல இளம் பாடகர் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

juice wrld

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகர் ஜரத் எ கிக்கின்ஸ். இவர் ஜூஸ் வேர்ல்ட் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார். ஆல் கேர்ல்ஸ் ஆர் தி சேம், லூசிட் ட்ரீம்ஸ் உள்ளிட்ட பாடல்களின் மூலம் புகழ்பெற்றவர். இவர் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்துள்ளார்.

அங்கிருந்த மருத்துவர்கள் குழு உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் கிக்கின்ஸை உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிப்பு நோய் பாதிக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

America singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe