கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் பகுதியில் கண்டறியப்பட்ட கரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் இந்திய அரசாங்கமும் இந்தியா முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

Advertisment

fred

இதனிடையே கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலியானோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிற்து. உலகம் முழுவதும் அறியப்பட்ட பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் ‘ஃப்ரெட் தி காட் சன்’ என்று அழைக்கப்படும் ஃப்ரெட்ரிக் தாமஸ் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக கரோனாவுடன் போராடி வந்த ஃப்ரெட்ரிக், தன்னுடைய 35- ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். ஹிப்ஹாப் இசைத்துறையில் மிகவும் பிரபலமானவரான இவரின் மறைவிற்குப் பலரும் சமூக வலைத்தளத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.