பிரபல தயாரிப்பாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை!

The famous producer was sentenced to 6 months in prison

தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல் போன்ற படங்களை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சினிமா பைனான்சியரான சுகன் போத்ராவிடம் சுமார் ரூ.2.6 கோடி கடன் வாங்கியிருந்தார்.

தான் பெற்ற கடன் தொகையைதிருப்பி செலுத்துவதற்காக தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார், பைனான்சியர் சுகன் போத்ராவிடம் காசோலையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சுகன் போத்ரா, வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால்அதிர்ச்சியடைந்த சுகன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் 4வது விரைவு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் கடன் தொகையை வட்டியுடன் சினிமா பைனான்சியர் சுகன் போத்ராவிடம் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

fake cheque film producer Prison
இதையும் படியுங்கள்
Subscribe