Skip to main content

பிரசவம் பார்த்த பிரபல எழுத்தாளர்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா  வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றன. 
 

chandrasekar

 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116- லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519- லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளாது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான படம் விசாரணை. இந்தப் படம் லாக்கப் என்கிர குறு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த நாவலை எழுதியவர் சந்திரசேகர். கோயம்புத்தூர் மாவட்ட சிபிஐ சார்பில் அந்த மாவட்டத்தில் தங்கியிருக்கும் ஒடிஷாவைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி உதவி வருகிறார் எழுத்தாளர் சந்திரசேகர்.
 

http://onelink.to/nknapp


அப்போது அந்த இடத்தில் ஒரு பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட, எழுத்தாளர் ஆம்புலன்ஸிற்கு தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்தக் குழந்தை வெளியேவர தொடங்கியதால் எழுத்தாளரும், அங்கிருந்த வேறு சிலரும் வலியில் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி, தாயையும் பிறந்த குழந்தைகளுக்கும் தேவையான உதவியைச் செய்துள்ளனர். இச்சம்பவத்தை எழுத்தாளரின் மகள் ஜீவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்