Skip to main content

மர்மமான முறையில் இறந்துகிடந்த பிரபல பாடகரின் சகோதரர்!

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான பாடகரான யேசுதாஸ். இவரின் இளைய சகோதரர் ஜஸ்டின் மர்மான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

kj justin

 

 

ஜஸ்டினுக்கு வயது 62, காக்காநாடு என்னும் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த நான்காம் தேதி இரவு காணாமல் போனார். இதனையடுத்து போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டது. 

இந்நிலையில், கொச்சி நகரின் வல்லார்படம் பகுதியிலுள்ள பேக்வாட்டர் ஓரத்தில் ஜஸ்டினின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முலவுகாடு காவல் நிலைய அதிகாரி சுனு, ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்ககலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவரது மகன் இறந்தபின் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். அதனால் கூட அவர் தற்கொலை செய்திருக்கலாமோ என்று சொல்லப்படுகிறது.

எனினும், அவர் உயிரிழந்தது பற்றிய உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மூன்று ஸ்தாயி பாடத் தெரிந்தவர் இவர் மட்டுமே"- கர்நாடக இசை குறித்து ஹோத்ரா பகிர்ந்து சுவார்ஷயங்கள்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

"He is the only one who can sing three sthayi"- Hotra interview!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற வரும், பரத நாட்டிய கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சிறு வயதில் இருந்து எல்லா போட்டிகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டு, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். கர்நாடக சங்கீதத்தில் எல்லோரையும் ஜாம்பவான்கள் என்று சொல்கிறோம். தமிழ் பண்பாடு மற்றும் கலைகளில் உயர்ந்த இடத்தில் இருப்பது கர்நாடக சங்கீதம். கர்நாடக இசையில் எப்படி ஜாம்பவான்கள் நிர்ணயிக்கிறார்கள் என்றால், மூன்று ஸ்தாயி பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கர்நாடக இசையில் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 

 

நாங்கள் நேரடியாக கச்சேரி மேடையில் பார்த்த போது, மூன்று ஸ்தாயிலில் பாடிய ஒரே நபர், பாடகர் யேசுதாஸ் அவர்கள் மட்டுமே. இப்போது அவர் எங்கிருக்கிறார்? ஏன் அவருடைய கச்சேரிகள் நடக்கவில்லை. எதுவுமே தெரியவில்லை? மூன்று ஸ்தாயி பாடத் தெரிந்தவர்கள் மட்டும் தான் ஒரு இசை ஜாம்பவான்கள் என்று கூறினால், அதில் யேசுதாஸ் மட்டும் தான் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் எல்லாம் உண்மையாகவே ஜாம்பவான்கள் தானா? என்ற கேள்வி என்னுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

 

உங்களுக்கு தெரிந்தவர்களில் மூன்று ஸ்தாயில் பாடல்களை பாடுபவர்கள் யார்? என்று கேள்வி கேளுங்கள். எதை வைத்து ஒருவருக்கு ஜாம்பவான் என்று கூறி விருதுக் கொடுக்கிறார்கள். என்னுடைய 20 ஆண்டுகால இசைப் பயணத்தில் இதுவரை மேடையில் மூன்று ஸ்தாயி பாடல்களைப் பாடியவர்கள் எவரும் இல்லை. நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது, மாணவர்களுக்காகவே யேசுதாஸ் அவர்கள் மூன்று ஸ்தாயில் பாடல்களைப் பாடி காட்டியுள்ளார். அவர் மட்டும் தான் பாடி கேட்டுள்ளோம். 

 

கர்நாடக சங்கீதம் அழிய கூடிய நிலையில், சென்று கொண்டிருக்கிறது. ஏன் இப்போது கச்சேரிகள் நடைபெறுவது இல்லை? ஏன் கர்நாடக சங்கீத இசை வித்வான்களும், கலைஞர்களும் எங்கு போனார்கள்? என்று தெரியவில்லை. ஏன் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை? என்று தெரியவில்லை. மொழி, மதம், இனம், சாதி ஆகியவையெல்லாம் தாண்டிய தெய்வீக கலைதான் இசை. கர்நாடக இசையை எல்லோரும் பாட முடியாது. நடனமாக இருந்தாலும், பாடல்களாக இருந்தாலும், கலை என்றாலே ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று கூறுவர். அப்பேர்பட்ட வரத்தை வாங்கியிருக்கிற யேசுதாஸ் ஏன் வெளியில் வரவில்லை? என்னுடைய கேள்வி இது தான். 

 

பத்ம பூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றனர். இந்த விருதை எதை வைத்துக் கொடுக்கிறார்கள்? ஒரு கச்சேரி நடத்தி முடித்துவிட்டார்கள் என்று விருது வழங்கப்படுகிறதா? அல்லது ஆயிரம் கீர்த்தனைகள் தெரிந்திருக்கிறது என்பதற்காகவா? ஒருவர் ஜாம்பவான் என்பது எதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

.

Next Story

“இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” - பாடகர் யேசுதாஸ் வருத்தம்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

spb and yesudass

 

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று (26.09.2020)உடல் நலக் குறைவால் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், இன்று காலை எஸ்.பி.பி.யின் உடல், தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா காலகட்டம் என்பதால் பலரும் நேரில் கலந்து அஞ்சலி செலுத்த முடியாமல் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பாடகர் கே ஜே யேசுதாஸ் எஸ்.பி.பி மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை எவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அண்ணா என்று கூப்பிடும்பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்கவில்லை ஆனால் உடன்பிறந்தவர் போலப் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.யும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

 

'சங்கராபரணம்' என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை எனக் கூறமாட்டர்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். 'சிகரம்' படத்தில் பாடிய 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு...' என்ற பாடல் பாலு எனக்குப் பரிசாகப் பாடியதாகக் கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். உடன் இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

 

Ad

 

நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.