சிறையில் மாஸ்க் தயாரிக்கும் பிரபல நடிகர்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசியமின்றி வெளியில் யாரும் கூடக்கூடாது, வீட்டைவிட்டு வெளியேவும் வரக்கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அப்படி வீட்டைவிட்டு வெளியே வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து தக்க தண்டனை கொடுத்து வருகின்றனர்.

indrans

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

nakkheeran app

இந்நிலையில் மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான இந்திரன்ஸ், பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பலரும் மாஸ்க், கையுறை போன்ற உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் கேரள அரசாங்கம் மாஸ்குகளை சிறை கைதிகளை வைத்துஉருவாக்கி வருகிறது. பூஜப்புரா மத்தி சிறையில் நடிகர் இந்திரன்ஸ் தன்னார்வலராக முன்வந்துகைதிகளுக்கு மாஸ்க் தயாரிப்பது எப்படி என்ற பயிற்சியை அளித்து வருகிறார்.

malayalam
இதையும் படியுங்கள்
Subscribe