/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/460_4.jpg)
சதிஷ் வஜ்ரா, 'லகோரி' என்ற கன்னட படத்தில் கதாநாயகனாகவும் சில கன்னட படங்களில் துணை நடிகராகவும் நடித்து பிரபலமானவர். பெங்களூரில் பட்டனகெரே,ஆர்ஆர் நகரை சேர்ந்த சதிஷ், முடி திருத்தும் செய்யும் கடை மற்றும் 'சதிஷ் வஜ்ரா' என்ற யூ-ட்யூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே சதீஷின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார், குடும்ப தகராறில் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அதன் பிறகு இவர்களின் குழந்தையை சதீஷின் மனைவி வீட்டிற்கு அனுப்பிவிட்டு, சதீஷ் தனியாகவே பெங்களூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சதிஷ் வஜ்ரா வீட்டில், கடந்த (18.06.2022) அன்று சில மர்ப நபர்கள், சதீஷை கொடூரமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் சதீஷ் வீட்டிலிருந்து, ரத்தம் கசிந்து வந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஸ்பேர் சாவியின் மூலம் சதீஷ் வீட்டை திறந்து, அங்கு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷை மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்பு மருத்துவ சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்துள்ளார். இவரது மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சதீஷின் மைத்துனர் சுதர்சன் மற்றும் அவரது உறவினர் நாகேந்திரா இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சதிஷ் மனைவி இறந்ததற்கு சதீஷ் தான் காரணம் என சுதர்ஷன் நம்பப்பட்டதாகவும், அதனால் சுதர்ஷன் இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பு கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)