actor sheer

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த பிரபல நடிகர் சரமாரியாகக் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சக நடிகர் நடிகைகள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முதலில் 'துளு' மொழியில் நடித்த சுரேந்திர பந்த்வால், பின்னர் கன்னட மொழிப் படங்களிலும் நடித்தார். 39 வயதாகும் அவர் கர்நாடக மாநிலம்,தக்‌ஷினா மாவட்டம், பந்த்வால் பகுதியிலுள்ளஅடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்வசித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமைஇரவுஅவருடைய நண்பர், அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.இதனால், சந்தேகமடைந்தவர் மறுநாள் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்திருக்கிறார். அப்போது,உடல் முழுவதும் குத்துப்பட்டநிலையில், சுரேந்திர பந்த்வால் சடலமாகக் கிடந்ததைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடலைக் கைப்பற்றிய காவல்துறை, பணத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில்,விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையில்இவர் நிழல் உலக ரவுடியாகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.மேலும், தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள்சம்பவ இடத்திற்கு வந்ததால்,விசாரணை வேகமெடுத்துள்ளது. அவருடைய மரணத்தால் திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது.