கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது.அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பல பிரபலங்களும் பலியாகி வருகின்றனர். தற்போது பிரபல பியானோ இசைக்கலைஞர் எல்லிஸ் மார்சலிஸ் கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
85 வயதாகும் இந்த இசைக்கலைஞர் கடந்த வாரம் கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நியூ ஆர்லியன்ஸ் மேயர் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.