Advertisment

தங்கம் வென்ற மாதவன் மகனுக்குப் பிரபல இந்தி நடிகை பாராட்டு

Famous Hindi actress praises gold winning son Madhavan

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து தமிழ், இந்தி மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். நீச்சலின் மீது ஆர்வமாக இருக்கும் இவரது மகன் 'வேதாந்த் மாதவன்' நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் டென்மார்க் தலைநகரில் நடந்த டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வேதாந்த் மாதவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisment

அந்த வகையில் பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தங்கம் வென்ற வேதாந்த் மாதவனுக்கு தனது வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில் "ஆஹா! இது ஒரு பெரிய செய்தி. நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் வாழ்த்துகள். இப்படி வெற்றியில் ஜொலிக்கும் வேதாந்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளீர்கள். கடவுள் அவரை எப்போதும் வெற்றி, மகிழ்ச்சி, மற்றும் அன்புடன் அருள்புரிவாராக" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

preeti zinta Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe