Published on 20/04/2020 | Edited on 20/04/2020
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116- லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519- லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த கிட்டாரிஸ்ட் மேத்திவ் செலிக்மன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருக்கு வயது 64. பிரபல இசைக் கலைஞராக இருந்த போதிலும் வழக்கறிஞர் பணியையும் மேற்கொண்டவர்.