உலகம் முழுவதும் கரோனா வைரஸால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.

Advertisment

karim morani

கரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த 24ஆம் தேதி இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைஅமல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானிகரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இவருடைய இரண்டு மகள்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.