kola baskar

பிரபல தமிழ் படத் தொகுப்பாளர் கோலா பாஸ்கர் காலமானார்.

Advertisment

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட செல்வராகவன் படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.

Advertisment

இதுமட்டுமல்லாமல் போக்கிரி மற்றும் வில்லு ஆகிய விஜய் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பல படங்களுக்கு படத் தொகுப்பு செய்துள்ளார். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்தார். இப்படத்தை கோலா பாஸ்கரே தயாரித்தார்.

கடந்த சில நாட்களாகத் தொண்டைப் புற்றுநோயால் கோலா பாஸ்கர் அவதிப்பட்டு வந்தார். இதற்காகதனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கோலா பாஸ்கர் மரணமடைந்தார். அவரது மறைவுக்குதமிழ், தெலுங்குதிரையுலகைசேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.