சாமானியனுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

A famous director who agreed to act for the saamaniyan

தம்பிக்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராகேஷ்; நீண்ட நாட்களாக திரையில் முகம் காண்பிக்காமல் இருந்த பல வெள்ளிவிழா படங்களைக் கொடுத்த நாயகன் ராமராஜனை வைத்து சாமானியன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் சாமானியன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாமானியன் படத்தில் நட்புக்காக நடிக்க ஒத்துக்கொண்ட உயர் மதிப்பிற்குரிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று இயக்குநர் ராகேஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

director ksravikumar
இதையும் படியுங்கள்
Subscribe