A famous director requested to udhayanidhi stalin

Advertisment

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் மற்றும் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2019-ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்டிக்கள் 15' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதிரையரங்கில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சீனு ராமசாமி 'நெஞ்சுக்கு நீதி' படத்தைப் பார்த்துப் பாராட்டியதோடு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் "கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதியிடம் அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்தது நெஞ்சுக்கு நீதி. அன்று நான் சொன்னது போல இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது.

அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் வாங்கி வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழம் தருணத்தை எதிர்நோக்கி....வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.