anubhav sinha

டாப்ஸி நடிப்பில் இந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'தப்பட்'. இந்தப் படத்தை இயக்கியவர் அனுபம் சின்ஹா. இவர், ‘ரா ஒன்’, ‘முல்க்’, ‘ஆர்டிகிள் 15’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

Advertisment

இவர் அனைத்து விதமான சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர். சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை தொடங்கி பாலிவுட் நெபோடிஸம் வரை குரல் கொடுத்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அன்று தான் பாலிவுட்டை விட்டு விலகப்போவதாக ட்விட்டர் பக்கத்தில் அனுபவ் சின்ஹா தெரிவித்திருந்தார். அவரது இந்தத் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் இதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த முடிவிற்கு விளக்கம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நிச்சயமாக நான் தொடர்ந்து படங்களை இயக்குவேன். இன்னும் அதிகமாக. ஆனால் என்னுடைய படமாக்கல் முறையைப் பெருமளவில் மாற்றவுள்ளேன். பாலிவுட்டை விட்டு மட்டும்தான் விலகுகிறேன். சினிமாவை விட்டு அல்ல. இதுகுறித்து விரிவாக நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment