Skip to main content

பிரபல இயக்குனர் காலமானார்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

nishikant


பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் நிஷிகாந்த் கமத். 'த்ரிஷ்யம்', 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான 'டோம்பிவாலி ஃபாஸ்ட்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை மாதவனை வைத்து தமிழில் 'எவனோ ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

 

கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மீண்டும் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிஷிகாந்த். தீவிர சிகிச்சையில் இருந்த நிஷிகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமானது. அதனால் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மீண்டும் அதே இயக்குநர் - பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.