mathiyalagan

அருண் விஜய், 'தடம்' படத்தைத் தொடர்ந்து நடிக்க இருக்கும் படங்களின் அறிவிப்புகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' என்றொரு படத்தில் நடித்தார் அருண் விஜய்.

Advertisment

'தடம்' படத்திற்கு முன்பே 'பாக்ஸர்' என்றொரு படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'தடம்' படம் வெளியானவுடன் அதில் நடிக்க தொடங்கினார். இதற்காக இந்தோனேசியா சென்று தற்காப்புக் கலையைப் பயின்று நடிக்க திட்டமிட்டார். இவருடன் ரித்விகா சிங்கும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தைப் புதுமுக இயக்குனர் விவேக் இயக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் இந்தப் படம் குறித்து அருண் விஜய் செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில், “என்னிடம் நிறைய பேர் 'பாக்ஸர்' படம் குறித்து ஆவலாகக் கேட்கிறார்கள். நானும் உங்களைப் போலவேஅந்தப் படத்தின் மீது ஆவலாக உள்ளேன். அந்தப் படத்திற்காக நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்தப் படத்திற்குத் தயாராவது தேவைப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் சரியான கிளாரிட்டி இருந்தால் மட்டுமே சரியான கால நேரத்தில் அந்தப் படத்திற்காக பணிபுரிய முடியும். அதனால் என்னுடைய படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டிற்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக, பிரபல தயாரிப்பாளர் வி. மதியழகன் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்செட்ரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில், 'செம போத ஆகாத', 'கொலையுதிர் காலம்' உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இதையடுத்து 'பாக்சர்' திரைப்படத்திற்காக உடலை மெருகேற்றி ஃபிட்டாக காட்சியளிக்கும் தயாரிப்பாளர் மதியழகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

Advertisment