
தெலுங்கு முன்னணி இயக்குனரான கொரடட்லா சிவா, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம்ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில், "வைரஸை விட, வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் அதை ஒரு ரகசியமாக வைத்திருப்பது இன்னும் பயங்கரமான அனுபவமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து பொறுப்புடன் நடந்துகொள்வோம்.
நமக்கு நெருங்கியவர்களிடமும், சமீபத்தில் சந்தித்த அனைவரிடமும் விஷயத்தைச் சொன்னால் அவர்களும் தங்களைப் பரிசோதித்துக் கொள்வார்கள். இதுதான் இந்த நேரத்தில் முக்கியம். இது அதிக நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டிய நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த ஊரடங்கில் 'ஆச்சார்யா' படத்தின் இறுதிகட்டப் பணிகளைக் கவனித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)