saroj khan

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ் கான், இன்று மாரடைப்பால் காலமானார்.

Advertisment

பாலிவுட்டில் எவர்கிரீன் பாடல்களாக இருக்கும் ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்றபாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சரோஜ் கான் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அன்று மும்பை குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

Advertisment