michael

மாரடைப்பு காரணமாக பிரபல காமெடி நடிகர் உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மைக்கல் மது, நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மைக்கல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இவருடைய இயற்பெயர் மது, மைக்கல் ஜாக்சனின் தீவிர விசிறி என்பதால் தனது பெயருக்கு முன்பாக மைக்கலைச் சேர்த்துக்கொண்டார்.

இவர் கன்னட சினிமாத்துறையில்முதன் முதலில் நடன கலைஞராகவே அறிமுகமாகினார். இவருடைய நடிப்பு பெரியளவில் பலரையும் கவர, அப்படியே நடிகராக 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

Advertisment