நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக கடந்த வியாழன் அன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 8000 விருந்தினர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு விழாவை கோலாகலமாக நடத்தினார்கள்.

Advertisment

modi

பாலிவுட் பிரபலங்களான அனுபம் கேர், கரண் ஜோஹார், விவேக் ஓபராய், கங்கனா ரனாவத், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ஷாஹித் கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், அபிஷேக் கபூர், ஆனந்த் எல். ராய், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில், “நான் உயிருடன் இருக்கும் வரை மோடியே இந்திய பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும். நான் மோடிஜியின் தீவிர ரசிகன். இந்த நாடு நல்ல மனிதரின் கையில் தான் உள்ளது என்று நினைக்கிறேன்” என்றார்.