Advertisment

கரோனா அச்சுறுத்தல்... பிரபல நடிகையின் பங்களா மூடல்!

rekha

Advertisment

பழம் பெரும் நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரிந்த பாதுகாவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால்,பங்களாவை கண்டெயின்மெண்ட் ஜோனாக அறிவித்து சீல் வைத்த மும்பை கார்ப்பரேஷன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவின் மும்பை நகரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ரேகாவின் பாந்த்ரா பகுதியிலுள்ள ‘சீ ஸ்பிரிங்க்ஸ்’ பங்களாவில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவருக்கு கரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மும்பை கார்ப்பரேஷன் பங்களாவை சீல் வைத்துள்ளது. இதனை அடுத்து முழு பகுதியும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக பாலிவுட் பிரபலங்கள் பலரின் வீட்டில் பணிபுரிபவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக நடிகை ரேகா எதுவும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe