உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,449 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக இத்தாலியில் 15,362, ஸ்பெயினில் 12,418, அமெரிக்காவில் 8,454, பிரான்சில் 7,560, பிரிட்டனில் 4,313, ஈரானில் 3,452, சீனாவில் 3,329 உள்ளிட்ட பல நாடுகளில் பலர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். மொத்தமாக உலகளவில் கரோனாவால் 12,10,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,51,822 பேர் குணமடைந்துள்ளனர்.

petricia

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பிரபல ஹாலிவுட் நடிகையும், எழுத்தாளருமான பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணமடைந்துள்ளார்.அவருக்கு வயது 86.

நடிகை பேட்ரிசியாவின் மரணச் செய்தியை அவரது வளர்ப்பு மகள் ஃபியா ஹட்ஸவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Advertisment