கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் கடந்த மாதத்திலிருந்து வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரபல ஹிந்தி டிவி நடிகை ஷ்ரேனு பரிக் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “எனக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா இருப்பது உறுதியானது. நான் தற்போது மருத்துவமனையில் உடல்நிலை மேம்பட்டு வருகிறேன். கரோனாவில் இருந்து மக்களைக் காக்கும் போராளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.