ADVERTISEMENT

பிரபல நடிகரின் மகன் மரணம்...

04:32 PM Mar 12, 2020 | santhoshkumar

மணிரத்னம் எழுத்தில் விஜய்காந்த் நடிப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான படம் சத்ரியன். இந்த படத்தில் வில்லனாக நடித்து தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகர் திலகன். இவர் சத்ரியன் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே மலையாள படங்களில் மிகப்பெரிய நடிகராகவும், தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளும் வாங்கி குவித்தவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 77வது வயதில் மரணமடைந்தார். தற்போது இவருடைய மகனான ஷாஜி திலகன் (வயது 55) உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மரணமடைந்துள்ளார். தந்தை திலகன்போல மிகவும் பிரபலமான நடிகராக மலையாள சினிமாவில் இவர் வரவேற்கப்படவில்லை என்றாலும் டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ஷாஜி.

திலகனின் இரண்டாவது மகனான ஷாஜிக்கு கணையத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்போது, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவருடைய மனைவி இந்திரா ஷாஜி, மகள் அபிராமி. இவருடைய மறைவிற்கு மலையாள திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT