venugopal kosuri

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு தற்போது பல தளர்வுகளுடன் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த லாக்டவுன் சமயத்தில் பல திரை பிரபலங்கள் கரோனாவால் பாலியாகியுள்ளனர். பலர் கரோனாவுடன் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட மற்றும் டிவி கலைஞர் கோசூரி வேணுகோபால், கடந்த 23-ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தெலுங்கு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, கரோனா காரணமா மருத்துவமனையில் கிட்டத்தட்ட 22 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மரியதா ராமண்ணா, பில்லா ஜமீன்தார் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.