Published on 30/07/2020 | Edited on 30/07/2020

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் அனில் முரளி. உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான 'கன்னியாகுமரியில் ஒரு கவிதா' என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அனில்.
சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனிலுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது, இதற்காக மருத்துவம் பார்த்து வந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 30) காலையில் உயிரிழந்தார்.
இச்செய்தி அறிந்த மலையாளம் மற்றும் தமிழ் பிரபலங்கள் அவருக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.