'தி ஃபர்ஸ்ட் ப்ளட்' என்ற படத்தின் மூலம் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் ப்ரியன் மேனியன் டெனஹி. டோனி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் ஆகிய விருது வழங்கும் விழாக்களில் சிறந்த நடிகருக்காக பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எமி விருது வழங்கும் விழாவில் ஆறு முறை பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.
கனெக்டிகட் என்னும் பகுதியில் ப்ரியன் தன்னுடைய 81 வயதில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நாடக கலைஞராகவும் சிறந்து விளங்கியுள்ளார். டூ கேச் அ கில்லர், டாமி பாய், குகூன், சில்வர்டோ உள்ளிட்ட படங்களில் இவருடைய கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டைப் பெற்றது.