பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் ஆசிப் பாஸ்ராவின் சடலம் இமாச்சல பிரதேசத்திலுள்ள தர்மஷாலாவில் தனியார் விருந்தினர் மாளிகையில் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்,அமேசான் ப்ரைமில் வெளியாகி ஹிட்டான பாதள் லோக் சீரிஸில் நடித்திருந்தார் ஆசிப் பாஸ்ரா.
53 வயதான நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள காவல்துறை மற்றும் தடயவியல் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விரிவான விசாரணையைக் காவல்துறை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மறைந்த செய்தியைக் கேட்டு, பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.