கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டைவிட்டு மக்கள் யாரும் வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரைக் காவல்துறை கைது செய்து தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
கரோனாவால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் உதவி செய்ய முயன்றவர்கள் மனிதாபிமானத்துடன் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்தி சினிமா நடிகர் ஆஷிஷ் கோகலே, கரோனவால் வாடும் மக்களுக்கு உதவ, தனது மருத்துவப் பணிக்குத் திரும்பியுள்ளார்.
வீட்டில் இல்லாமல் மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவப் பணிக்குத் திரும்பிய நடிகரை மக்கள் அனைவரும் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.