/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/216_21.jpg)
யுகே கிரியேஷன் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், படம் ‘ஃபேமிலி படம்’. இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிவீ இசையமைக்கிறார்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள்,அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் துவங்கியது.
முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)