Skip to main content

குடும்பங்கள் கொண்டாடும் 'லெஜண்ட்'

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

family audience celebrate legend movie

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் அடுத்ததாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. ஜே.டி - ஜெரி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, கீதிகா, விவேக், பிரபு, யோகி பாபு, நாசர் என ஏராளமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மற்றும் பெண்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வார இறுதி நாள் என்பதால் படத்தின் வசூலும் அதிகரிக்கக்கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகர் பரிசளித்த தங்க கேக் - விமர்சனத்திற்கு உள்ளான லெஜண்ட் பட நடிகை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Urvashi Rautela cuts 24-carat gold cake with Honey Singh gets criticise

பாலிவுட்டில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுதெலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படம் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தியை தவிர்த்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல ராப் பாடகர் ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்ற ஆல்பத்தில் நடித்து வருகிறார். 

அதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (25.02.2024) தனது 30வது பிறந்தநாளை ஊர்வசி ரவுதெலா கொண்டாடிய நிலையில், பாடகர் ஹனி சிங் அவருக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை ஊர்வசி ரவுதெலா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.  

Next Story

தங்க ஐ போனை தொலைத்த பிரபல நடிகை

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Urvashi Rautela loses 24 carat gold iPhone during India vs Pakistan match

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண பல்வேறு முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் திரை பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலாவும் கலந்து கொண்டு போட்டியை ரசித்தார். 

 

அப்போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போனைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

 

பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேலா, தமிழில் சரவணா ஸ்டோர் குழுமத்தை சேர்ந்த சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.