/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1302_0.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் அடுத்ததாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. ஜே.டி - ஜெரி இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, கீதிகா, விவேக், பிரபு, யோகி பாபு, நாசர் என ஏராளமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மற்றும் பெண்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் வார இறுதி நாள் என்பதால் படத்தின் வசூலும்அதிகரிக்கக்கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)