வெப் தொடரில் அஞ்சலி... வெளியான ஃபர்ஸ்ட் லுக்

fall web series first look out now

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் வெப் தொடர் 'ஃபால்'. இந்த வெப் தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர், ‘வெர்டிஜ்' (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின்அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த தொடரை பனிஜய்ஆசியா தயாரித்துள்ளார்.

இந்த தொடர், திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுகிறாள். மேலும், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்கிறாள் என்பதை த்ரில்லர் ஜானரில் இயக்குநர் எடுத்துள்ளாராம். இந்நிலையில் இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

Anjali
இதையும் படியுங்கள்
Subscribe