Advertisment

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...

பிரபல ஹாலிவுட் நடிகரும், wwe-ன் பிரபல வீரரான ‘தி ராக்’ என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் தற்போது நடித்து வரும் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துவரும்போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்துவிட்டதாக வதந்தி நேற்று மாலையில் பரவி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியது.

Advertisment

the rock

‘தி ராக்’ என்றால் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானவர். தற்போது மிகப்பெரிய நடிகராகவும், 90ஸ் கிட்ஸுக்கு wwf வீரராக தெரிந்தவர். கடந்த வருடத்தில் அதிக சம்பளம் பெற்ற டாப் 10 நடிகர்கள் பட்டியலில் ரூ.640 கோடி பெற்று முதலிடத்தை பிடித்தவர் டுவைன் ஜான்சன்தான்.

பிரபல ஆங்கில செய்தி சேனலான பிபிசி லோகோவை பயன்படுத்தி தி ராஜ் இறந்துவிட்டார் என்று பதிவுபோட, அதனால் அனைவரும் அதை நம்பி, பின்னர் அது வதந்தி என்று தெரிந்து மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisment

பொதுவாக இதுபோன்ற மரணச் செய்திகள் பிரபலங்களுக்கு புதிதல்ல, இவ்வளவு டுவைன் ஜான்சனுக்கே இது மூன்றாவது முறை, அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. தற்போது ராக்கிற்கு 47 வயதாகிறது. சமீபத்தில்தான் லாரன் ஹாசியன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

முன்னதாக 2011ல் டுவைன் ஜான்சன் மரணமடைந்துவிட்டார் என்று தவறான செய்தி ஒன்று பரவியது. அப்போது, ஜான்சனே ஃபேஸ்புக்கில் என்னைப்பற்றி வெளியான மரண செய்தி தவறானது என்று பதிவிட்டிருந்தார்.

dwayne jhonson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe