/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-16.jpg)
கர்ணன் பட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். அடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பில் ஃபகத் பாசில் இணைந்துள்ளார். அவரை மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் ஃபகத் பாசில் தமிழில் நடிக்கும் நான்காவது படம் ஆகும். 'வேலைக்காரன்', 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக கமலின் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)