/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Fahadh-Faasil.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, அக்கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார் எனத் தகவல்கள் பரவிய நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)