/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/133_9.jpg)
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாகவும் அதற்கான பயிற்சியை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க மாரி செல்வராஜ் ஒப்பந்தமானார். துருவ் விக்ரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை முடித்துவிட்டே துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளாராம்.
மாரி செல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்திவரும் படக்குழு, இப்படம் தொடர்பான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)