/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/38_21.jpg)
'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். இப்படம் பெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ளது. மல்டி ஸ்டார் படம் என்பதால் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி மம்மூட்டி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஃபகத் ஃபாசிலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 'விக்ரம்' படத்தை தொடர்ந்து மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஃபகத் ஃபாசில்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)