Fahadh Faasil

நடிகை நஸ்ரியாவின் கணவரும்,மலையாள திரையுலகின் முன்னணி நடிகருமான பகத் ஃபாசில், சஜிமோன் பிரபாகரன் இயக்கி வரும் 'மலையன் குஞ்சு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சண்டைக்காட்சியைப் படக்குழுவினர் படமாக்கி வந்த வேளையில், உயரத்தில் இருந்து குதித்த பகத் ஃபாசில் கால் இடறிக் கீழே விழுந்தார். அதில், அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="a1347c3f-c005-455e-b3ff-5b54f60eecf9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_17.png" />

Advertisment

இதனையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பகத் ஃபாசில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பயப்படும்படி ஏதும் இல்லை என்று கூறி, கட்டயமாக ஒரு வார ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, 'மலையன் குஞ்சு' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பகத் ஃபாசில் குணமைடந்த பிறகே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment