/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/137_35.jpg)
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், சஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆவேஷம். நஸ்ரியா நசிம் மற்றும் அன்வர் ரஷீத் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் நடிப்பை சமந்தா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றார்.
அதன் காரணமாக வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் ஆவேஷம் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 7வது படமாக இப்படம் இருக்கிறது. இதற்கு முன்பாக மஞ்சும்மல் பாய்ஸ், 2018 , புலிமுருகன், ஆடுஜீவிதம், பிரேமலு, லூசிஃபர் உள்ளிட்ட படங்கள் இணைந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/136_38.jpg)
சமீப காலமாக மலையாள சினிமாக்கள் கேரளாவைத்தாண்டி மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட்படங்களாக வெளியாகி வருகிறது. இந்த ஹிட் லிஸ்டில் தற்போது ஆவேஷமும் இணைந்துள்ளது. அதோடு ஃபகத் ஃபாசில் நடித்த முதல் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.
Follow Us