extra charge in theatres court directed the Tamil Nadu government to take action

சூர்யா நடித்த சிங்கம் 3, விஜய் நடித்த பைரவா உள்ளிட்ட படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாகியிருந்த நிலையில் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் காவல்துறை மற்றும் இது தொடர்பான அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட திரையரங்குகளில் அபராதம் வசூலிக்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதையடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனக் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.