Advertisment

'தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்...' ; கவனம் ஈர்க்கும் 'வாய்தா' பட ட்ரைலர்

'Execution is the only punishment ...'; 'Vaaitha' movie trailer

Advertisment

அறிமுக இயக்குநர் மகிவர்மன் சி.எஸ் இயக்கத்தில் மே-6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'வாய்தா'. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். கதாநாயகியாக ஜெசிகா நடிக்க நாசர் மற்றும் 'ஜோக்கர்', 'கே.டி என்கிற கருப்புதுறை' பட புகழ் மு.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் 'வாய்தா' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சாமானிய மக்களை சுற்றி நடக்கும் அரசியலை நகைச்சுவை கலந்து பேசியிருப்பதாக இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. ஏற்கனவே டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது டிரைலரும் பலரின் கவனத்தை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் இருபதிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nassar vaaitha movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe