mr.chandramouli

ajith

Advertisment

அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அஜித் இப்படத்தில் அண்ணன், தம்பி என

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் இளமை தோற்றத்தில் கருப்பு நிற தாடியுடன் மதுரை பின்னணியில் நடிக்கும் தம்பி அஜித்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது விரைவில் முடிவடைந்து வெள்ளை நிற தாடியுடன் தோன்றும் அண்ணன் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்க படக்குழு விரைவில் மும்பைக்கு செல்லவுள்ளதாக படக்குழுவிலுருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அண்ணன் அஜித் மும்பை வாசியாக, தம்பி அஜித் மதுரை வாசியாக வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">